புதிய கேஜெட்டுகள்

இனி சார்ஜ் பற்றி கவலையே பட வேண்டாம்... 15,000mAh பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2022-06-27 09:53 GMT   |   Update On 2022-06-27 09:53 GMT
  • கிரே மற்றும் ஆரஞ்சு ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

ஹாட்வேவ் நிறுவனத்தின் W10 ரக்கட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது ராணுவ தரத்தால் ஆன டியுரபிலிட்டி மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்றால் அது அதில் உள்ள 15,000mAh பேட்டரி தான். இதனால் இந்த W10 ரக்கட் ஸ்மார்ட்போன் 1200 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. இதுதவிர இதில் 6.53 இன்ச் HD+ டிஸ்ப்ளே, குவாட் கோர் பிராசஸர், வாட்டர் டிராப் நாட்ச் போன்ற அம்சங்களும் உள்ளன.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் பேஸ் அன்லாக் வசதியும் உள்ளது. கேமராவை பொருத்தவரை டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது. அதன்படி 13MP பிரைமரி கேமரா லென்ஸ் மற்றும் 5MP செல்பி கேமரா யூனிட் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கிறது.


புதிய ஹாட்வேவ் W10 ரக்கட் ஸ்மார்ட்போன் இன்று (ஜூன் 27) முதல் அலி எக்ஸ்பிரஸ் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அறிமுக விலை என்பதால் தற்போது கம்மி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பின் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 11 ஆயிரமாக மாறி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரே மற்றும் ஆரஞ்சு ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. 

Tags:    

Similar News