ஜனவரியில் இந்தியா வரும் ரெட்மி நோட் 12 5ஜி
- சியோமி நிறுவனம் மற்றொரு ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.
- இதே தேதியில் இரண்டு ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மற்றும் நோட் 12 ப்ரோ மாடல்களை தொடர்ந்து ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனும் இந்திய சந்தையில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசரை சியோமி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இது பட்ஜெட் ரக நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும்.
டீசரின் படி புதிய ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சப்போர்ட், AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் பிராசஸர், 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 48MP பிரைமரி கேமரா வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் இதுவரை வெளியானதில் மிகவும் மெல்லிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 12 5ஜி மாடல் இருக்கும் என சியோமி தெரிவித்துள்ளது. டீசரில் புது ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 5ஜி மாடலில் இரட்டை கேமரா சென்சார்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. மேலும் இதன் இந்திய வெர்ஷனில் ஃபிலாஷ் வைக்கப்பட்டு இருந்த பகுதியும் மாற்றப்பட்டு இருக்கிறது.
ரெட்மி நோட் 12 5ஜி அம்சங்கள்:
6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல், GOLED 60/90/120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர்
4 ஜிபி /6 ஜிபி / 8 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13
டூயல் சிம் ஸ்லாட்
48MP பிரைமரி கேமரா
2MP டெப்த் சென்சார்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்திய சந்தையில் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் Mi வலைதளங்கள், ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.