புதிய கேஜெட்டுகள்

விரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 12 4ஜி

Published On 2023-01-18 12:22 GMT   |   Update On 2023-01-18 12:22 GMT
  • சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் IMEI டேட்டாபேஸ் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
  • புதிய ரெட்மி நோட் 12 4ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஒஎஸ் வழங்கப்பட இருக்கிறது.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் தனது புதிய 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது ரெட்மி நோட் 12 4ஜி மாடல் விவரங்கள் IMEI டேட்டாபேஸ் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

4ஜி வேரியண்ட் என்பதால் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. ஏற்கனவே கடந்த மாதம் வெளியான தகவல்களில் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 ப்ரோ 4ஜி மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் NBTC தளத்தில் இடம்பெற்று இருந்தது.

இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11 ப்ரோ 2023 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் தான் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 5ஜி சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் ரெட்மி நோட் 12 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்று இருக்கிறது.

சீனா மற்றும் இந்தியாவில் ரெட்மி நோட் 12 4ஜி மாடல் குறைந்த விலை நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படலாம். அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.67 இன்ச் FHD+ சூப்பர் AMOLED 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார், 13MP செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.

Tags:    

Similar News