புதிய கேஜெட்டுகள்

கூகுள் பிளே கன்சோலில் லீக் ஆன 2023 ரெட்மி நோட் 11 ப்ரோ

Update: 2022-09-23 06:11 GMT
  • சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 11 ப்ரோ 2023 ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன.
  • இந்த வலைதள விவரங்களின் மூலம் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட்போன் ப்ரியர்கள் ரெட்மி நோட் 12 சீரிசுக்கு ஆவலோடு காத்திருக்கும் நிலையில், சியோமி இன்னமும் ரெட்மி நோட் 11 சீரிசை உருவாக்கி வரும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11 ப்ரோ 2023 எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவரங்கள் கூகுள் பிளே டெவலப்பர் கன்சோல் தளத்தில் இடம்பெற்றுள்ளன.

விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் அம்சங்களும் வெளியாகி உள்ளது. கூகுள் பிளே மட்டுமின்றி ரெட்மி நோட் 11 ப்ரோ 2023 மாடல் விவரங்கள் IMEI மற்றும் FCC போன்ற வலைதளங்களிலும் லீக் ஆகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2209116AG எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது.

புதிய ரெட்மி நோட் 11 ப்ரோ 2023 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் அட்ரினோ 616 GPU வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் HFD+ 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் நான்கு கேமரா சென்சார்கள், முன்புறம் பன்ச் ஹோல் கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. 2023 ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் ரெட்மி நோட் 10 ப்ரோ மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. வரும் நாட்களில் புதிய ரெட்மி நோட் 11 ப்ரோ 2023 மாடல் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News