புதிய கேஜெட்டுகள்

இருக்கு ஆனா தெரியாது.. வேற லெவல் கேமராவுடன் உருவாகும் புதிய ஸ்மார்ட்போன்

Published On 2023-11-15 10:12 GMT   |   Update On 2023-11-15 10:12 GMT
  • ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.

நுபியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ரெட் மேஜிக் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான அதிகாரப்பூர்வ ரெண்டர்களை நுபியா வெளியிட்டு உள்ளது.

புதிய ரெட் மேஜிக் 9 சீரிஸ் மாடல்கள் நவம்பர் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. தற்போதைய ரெண்டர்களின் படி ரெட் மேஜிக் 9 ப்ரோ மாடல் டுயெடெரியம் டிரான்ஸ்பேரண்ட் சில்வர் விங்ஸ், டுயெடெரியம் டிரான்ஸ்பேரண்ட் டார்க் நைட் மற்றும் டார்க் நைட் வேரியண்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

பெயருக்கு ஏற்றார்போல் இந்த ஸ்மார்ட்போனின் டிரான்ஸ்பேரண்ட் நிற ஆப்ஷன்களில் போனின் பாகங்கள் தெரியும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்களின் படி இதன் பின்புற பேக் பேனலில் கேமரா பம்ப் எதுவும் இடம்பெறவில்லை. மேலும் ஃபுல் ஸ்கிரீன் அனுபவத்தை வழங்குவதற்காக இந்த மாடலில் அன்டர் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

ரெட் மேஜிக் 9 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News