புதிய கேஜெட்டுகள்

சோனி கேமரா, ஏர் ஜெஸ்ட்யூர்.. ஏகப்பட்ட வசதிகளுடன் ரிலீசுக்கு ரெடியாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2024-03-07 13:42 GMT   |   Update On 2024-03-07 13:42 GMT
  • புதிய ரியல்மி ஸ்மார்ட்போனிற்கு டீசர்கள் வெளியாகி வருகின்றன.
  • இந்த ஸ்மார்ட்போனில் 50MP கேமரா வழங்கப்படுகிறது.

ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

புதிய ஸ்மார்ட்போனிற்காக மைக்ரோசைட் ஒன்றும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் வெளியாகி இருக்கும் புதிய டீசர்களில் ரியல்மி நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் இதர அம்சங்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி நார்சோ 70 ப்ரோ மாடலில் சோனி IMX890 சென்சார் மற்றும் OIS வசதிகள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

 


இந்த மாடலில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் ஏர் ஜெஸ்ட்யூர் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏர் ஜெஸ்ட்யூர் வசதி மூலம் பயனர்கள் ஸ்மார்ட்போன் அம்சங்களை திரையில் நேரடியாக தொடாமல், சற்று தூரத்திலேயே செய்கைகள் மூலம் இயக்க முடியும். முதற்கட்டமாக இந்த வசதியின் கீழ் பத்து வெவ்வேறு ஜெஸ்ட்யூர்கள் வழங்கப்படுகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி நார்சோ 70 ப்ரோ மாடலில் ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே டிசைன், ஃபிளாட் ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள் வழங்கப்படுகிறது. இதன் வலதுபுறத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வழங்கப்படுகிறது. பின்புறத்தில் வட்ட வடிவம் கொண்ட கேமரா பம்ப் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News