புதிய கேஜெட்டுகள்
null

இந்திய வெளியீட்டுக்கு தயாராக இரு ஸ்மார்ட்போன்கள் - இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்!

Published On 2023-03-27 08:53 GMT   |   Update On 2023-03-27 08:58 GMT
  • ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தனது GT3 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.
  • நத்திங் நிறுவனம் தனது போன் (2) மாடலை அமெரிக்க சந்தையிலும் அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது.

இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவதை பிஐஎஸ் வலைத்தளத்தில் இருந்து அறிந்து கொள்ள முடியும். புதிய ஸ்மார்ட்போன்கள் ஏதும் பிஐஎஸ் சான்று பெற்றுவிட்டால், இவை இந்திய வெளியீட்டு தயாராகி இருப்பதை உறுதிப்படுத்தி விடலாம். அந்த வகையில், ரியல்மி மற்றும் நத்திங் என இரு நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்கள் பிஐஎஸ் சான்று பெற்றுள்ளன.

ரியல்மி நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்த ரியல்மி GT3 ஸ்மார்ட்போன் தற்போது பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. பிஐஎஸ் தளத்தில் ரிய்லமி GT3 ஸ்மார்ட்போனஅ RMX3709 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பொதுவாக பிஐஎஸ் தளத்தில் ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் தவிர இதர விவரங்கள் எதுவும் இடம்பெற்று இருக்காது. எனினும், ரியல்மி GT3 ஏற்கனவே சர்வதேச சந்தையில் கிடைப்பதால் இதன் அம்சங்கள் அனைவரும் அறிந்ததே.

 

ரியல்மி தவிர நத்திங் நிறுவனத்தின் புதிய போன் (2) மாடல் பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதன் மூலம் நத்திங் போன் (2) மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் போதே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய நத்திங் போன் (2) AIN065 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. நத்திங் போன் (2) மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழஹ்கப்பட இருக்கிறது.

நத்திங் போன் (2) எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

நத்திங் போன் (2) மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யுஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த நத்திங் ஒஎஸ், 50MP பிரைமரி கேமரா, OIS சப்போர்ட், போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

 

ஏற்கனவே சர்வதேச சந்தையில் கிடைக்கும் ரியல்மி GT3 மாடலில் 6.74 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மைக்ரோஸ்கோபிக் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0 கொண்டிருக்கும் ரியல்மி GT3 ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஹெச் பேட்டரி, 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News