புதிய கேஜெட்டுகள்

விரைவில் இந்தியா வரும் ரியல்மி 5ஜி போன்

Update: 2022-08-06 05:55 GMT
  • ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புது சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
  • தற்போது 50 லட்சம் பேர் ரியல்மி 5ஜி சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி ரியல்மி 9i 5ஜி மாடல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ரியல்மி 9i 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருந்தது.


ரியல்மி 7 சீரிஸ் மாடலில் மிரர் டிசைன், ரியல்மி 8 சீரிசில் டைனமிக் லைட் டிசைன், ரியல்மி 9 சீரிசில் ரிப்பில் ஹாலோகிராபிக் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வரிசையில், ரியல்மி 9i 5ஜி மாடலில் லேசர் லைட் டிசைன் வழங்கப்பட இருக்கிறது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இதே பிராசஸர் கொண்டு ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய 5ஜி போன் வெளியீட்டை உணர்த்தும் டீசரை ரியல்மி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ரியல்மி 9i 5ஜி போன் மூன்று கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என உறுதியாகி விட்டது. இத்துடன் FHD+ LCD ஸ்கிரீன், 5000 mAh பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News