புதிய கேஜெட்டுகள்

புதிய 10 ப்ரோ சீரிஸ் இந்திய வெளியீடு - ரியல்மி அசத்தல் அறிவிப்பு!

Update: 2022-11-24 06:57 GMT
  • ரியல்மி நிறுவனம் புது ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்வதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது.
  • சமீபத்தில் தான் ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் மாடல்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் ரியல்மி 10 ப்ரோ 5ஜி மாடல்கள் இந்தியாவில் டிசம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ரியல்மி இந்தியா ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது. கடந்த மாத வாக்கில் ரியல்மி தனது ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இவை இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

புதிய ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் வளைந்த டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 10 ப்ரோ 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர், 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் இந்திய வெளியீடு டிசம்பர் 8 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. வெளியீட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை ரியல்மி வெளியிட துவங்கி உள்ளது. இந்தியாவில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மற்றும் ரியல்மி 10 ப்ரோ மாடல்களின் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் வகையில் ப்ளிப்கார்ட் தனது வலைதளத்தில் பிரத்யேக வலைப்பக்கம் ஒன்றை திறந்துள்ளது. இதில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் ரியல்மி 10 ப்ரோ 5ஜி மாடல்களின் விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன. மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சீன சந்தையில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலின் விலை CNY 1699, இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்து 500 என துவங்குகிறது. ரியல்மி 10 ப்ரோ 5ஜி மாடலின் விலை CNY1599 இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 500 என துவங்குகிறது. இரு விலைகளும் ஸ்மார்ட்போன்களின் பேஸ் வேரியண்ட் ஆகும்.

Tags:    

Similar News