புதிய கேஜெட்டுகள்

விரைவில் இந்தியா வரும் ரியல்மி 10 4ஜி - இணையத்தில் வெளியான புது தகவல்

Update: 2022-11-21 11:07 GMT
  • ரியல்மி நிறுவனம் பல்வேறு புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • சமீபத்தில் ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.

ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி பற்றி ரியல்மி சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும், இதுபற்றி இணையத்தில் வெளியாகி இருக்கும் புது தகவலில் ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் மூன்று வித ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரியல்மி நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடலாக ரியல்மி 10 4ஜி மாடல் அமைகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸருடன் சமீபத்தில் தான் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

டிப்ஸ்டர் சுதான்ஷூ அம்போர் 91மொபைல்ஸ் உடன் இணைந்து வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என மூன்று வித ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் ஐந்து வித ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் ரியல்மி 10 4ஜி மாடல் விலை 229 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 600 என துவங்குகிறது.

ரியல்மி 10 4ஜி அம்சங்கள்:

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 10 4ஜி மாடல் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் 6nm மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 8 ஜிபி ரேம், ARM G57 MC2 GPU கிராஃபிக்ஸ், விர்ச்சுவல் ரேம் வசதி வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மெமரியை பொருத்தவரை அதிகபட்சம் 256 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் கொண்டிருக்கிறது. 

Tags:    

Similar News