புதிய கேஜெட்டுகள்

67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் - வலைதளங்களில் லீக் ஆன போக்கோ X5 5ஜி

Published On 2022-11-26 06:22 GMT   |   Update On 2022-11-26 06:22 GMT
  • போக்கோ நிறுவனம் புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • போக்கோவின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் லீக் ஆகி இருக்கிறது.

போக்கோ நிறுவனம் X5 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் ஏற்கனவே பிஐஎஸ் இந்தியா மற்றும் எஃப்சிசி போன்ற வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இதே ஸ்மார்ட்போன் 3C மற்றும் IMDA வலைதளங்களிலும் லீக் ஆகி இருக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

சீனாவின் 3C சான்றளிக்கும் வலைதளத்தில் 22101320C எனும் மாடல் நம்பர் கொண்ட போக்கோ ஸ்மார்ட்போன் இடம்பெற்று இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி இந்த மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் போக்கோ X5 5ஜி என கூறப்பட்டு வந்தது. அதன்படி இந்த மாடலில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. முந்தைய போக்கோ X4 ப்ரோ 5ஜி மாடலிலும் இதே அளவு ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் IMDA வலைதளத்திலும் இதே மாடல் நம்பருடன் இடம்பெற்று இருந்தது. எனினும், இதில் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. போக்கோ X5 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிடுவது பற்றி போக்கோ இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், இந்த மாடலின் வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

சமீபத்திய எஃப்சிசி விவரங்களின் படி போக்கோ X5 5ஜி மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட IPS LCD ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் பிராசஸர் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்த போக்கோ X4 ப்ரோ 5ஜி மாடலில் 6.67 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 16MP செல்ஃபி கேமரா, 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 13 ஒஎஸ் கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News