புதிய கேஜெட்டுகள்

குறைந்த விலையில் கிளாஸ் டிசைன் ஸ்மார்ட்போன் - டீசர் வெளியிட்ட போக்கோ

Published On 2024-03-22 12:56 GMT   |   Update On 2024-03-22 12:56 GMT
  • போக்கோ C51 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
  • இந்த மாடலில் இரட்டை கேமராக்கள் வழங்கப்படுகிறது.

போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் (மார்ச் 26) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை போக்கோ இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இது தொடர்பான டீசர்களில் புதிய போக்கோ C61 ஸ்மார்ட்போன் அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய போக்கோ C51 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

 


போக்கோ C61 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மார்ச் 26 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.

ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கும் டீசர்களின் படி புதிய போக்கோ C61 ஸ்மார்ட்போன் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட HD+ டிஸ்ப்ளே, 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கிளாஸ் பேக் மற்றும் கேமராவை சுற்றி கோல்டன் ரிங் டிசைன் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. போக்கோ C61 ஸ்மார்ட்போன் ரெட்மி A3 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.



Tags:    

Similar News