புதிய கேஜெட்டுகள்

மலிவு விலையில் புது போக்கோ ஸ்மார்ட்போன் விரைவில் வெளியீடு!

Update: 2022-11-19 05:21 GMT
  • போக்கோ நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய குறைந்த விலை போக்கோ ஸ்மார்ட்போன் தலைசிறந்த கேமரா, மல்டிமீடியா திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

போக்கோ நிறுவனம் தனது அடுத்த குறைந்த விலை ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போன் போக்கோ C50 எனும் பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த மாடல் நவம்பர் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படுகிறது.

"புதிய போக்கோ C50 மாடல் தலைசிறந்த கேமரா, சிறப்பான மல்டிமீடியா அனுபவம், நீண்ட நேர பேட்டரி பேக்கப் மற்றும் மெல்லிய டிசைன் கொண்டிருக்கும்," என போக்கோ தெரிவித்து இருக்கிறது. இது போக்கோ நிறுவனத்தின் புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். முன்னதாக போக்கோ நிறுவனம் C31 மற்றும் C3 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.

"முன்னணி நுகர்வோர் தொழில்நுட்ப பிராண்டுகளில் ஒன்றாக இருக்கும் போக்கோ, தனது விசிறிகள் மற்றும் நுகர்வோருக்கு அதிக தரமான சாதனங்களை வினியோகம் செய்வதை குறிக்கோளாக கொண்டுள்ளது. தற்போது C சீரிஸ் ஸ்மார்ட்போனினை மலிவு விலையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது," என போக்கோ தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ C40 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய போக்கோ C50 இருக்கிறது. புதிய போக்கோ C50 மாடலில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் பற்றி போக்கோ இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. எனினும், இதில் போக்கோ C40 ஸ்மார்ட்போனை விட மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

போக்கோ C40 அம்சங்கள்:

போக்கோ C40 மாடலில் 6.71 இன்ச் HD+ ரெசல்யூஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 60Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் JLQ JR510 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் அறிமுகமாகும் போக்கோ C50 மாடலில் குவால்காம் அல்லது மீடியாடெக் பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

இத்துடன் போக்கோ C40 மாடலில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

வியட்நாமில் போக்கோ C40 விலை இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 687 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய போக்கோ C50 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News