புதிய கேஜெட்டுகள்

இணையத்தில் லீக் ஆன முதல் ரென்டர்கள் - ஒன்பிளஸ் V ஃபோல்டு இப்படி தான் இருக்குமாம்..!

Published On 2023-06-21 08:46 IST   |   Update On 2023-06-21 08:46:00 IST
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபில் போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • ஒன்பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றி ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரென்டர்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளது.

ரென்டர்களின் படி ஒன்பிளஸ் V ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஹேசில்பிலாடு பிரான்டிங், அலர்ட் ஸ்லைடர், லெதர் போன்ற ஃபினிஷ் மற்றும் கிளாஸ் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. ரென்டர்களில் ஆன்டெனா பேன்ட்கள் காணப்படுவதால், இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

 

இத்துடன் புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள், பெரும்பாலும் பெரிஸ்கோப் கேமரா சேர்த்து வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் கேமரா பம்ப் பேக் பேனலின் மத்தியிலும், எல்இடி ஃபிளாஷ் வலதுபுற ஓரத்திலும் காணப்படுகிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பவர் பட்டனிலேயே பொருத்தப்பட்டு இருக்கிறது.

வெளிப்புற டிஸ்ப்ளேவின் மேல்புறம் பன்ச் ஹோல் கேமரா திரையின் மத்தியல் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் திரை எந்த அளவில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், வெளிப்புற ஸ்கிரீன் சற்றே பெரிதாக காட்சியளிக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

Photo Courtesy: @OnLeaks @smartprix

Tags:    

Similar News