120Hz டிஸ்ப்ளே, 70W ஸ்பீக்கர் கொண்ட ஒன்பிளஸ் 4K டிவி இந்தியாவில் அறிமுகம்
- ஒன்பிளஸ் நிறுவனம் கிளவுட் 11 நிகழ்வில் தனது புதிய விலை உயர்ந்த 4K டிவியை அறிமுகம் செய்தது.
- புதிய ஒன்பிளஸ் 4K டிவி 120Hz ரிப்ரெஷ் ரேட், 70 வாட் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் Q சீரிஸ் டிவி மூலம் அந்நிறுவனம் தனது Q சீரிஸ் மாடலை மூன்று ஆண்டுகள் கழித்து அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மாடலில் 65 இன்ச் QLED 4K பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவாண்டம் டாட் லேயர் தொழில்நுட்பம் உள்ளது.
மேலும் இதில் உள்ள காமா என்ஜின் டிஸ்ப்ளே தரத்தை ஆப்டிமைஸ் செய்கிறது. புதிய Q2 ப்ரோ மாடலில் 70 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் 2.1 சேனல் சப்போர்ட் உள்ளது. டைனாடியோ டியூன் செய்த ஹாரிசான் சவுண்ட்பாரினுள் மொத்தம் ஏழு ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஒட்டுமொத்த ஸ்பீக்கர் அவுட்புட்-இல் 30 வாட் சப்-வூஃபர் இடம்பெற்று இருக்கிறது.
இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி 11 சார்ந்த ஆக்சிஜன்பிளே 2.0 ஒஎஸ், கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. மேலும் ஒன்பிளஸ் கனெக்ட் 2.0 மற்றும் NFC கேஸ்ட் அம்சங்கள் உள்ளன. இதை கொண்டு ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச், ஒன்பிளஸ் பேட் உள்ளிட்டவைகளை எளிதில் ஒன்பிளஸ் டிவியுடன் இணைத்துக் கொள்ளலாம்.
ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ அம்சங்கள்:
65 இன்ச் 4K 3840x2160 பிக்சல் QLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
டால்பி விஷன், HDR10+, HLG
பிக்சர் என்ஹான்சர்: காமா என்ஜின் அல்ட்ரா
70 வாட் 2.1 சேனல் சவுண்ட் அவுட்புட் (40 வாட் சவுண்ட்+30வாட் சப்வூஃபர்)
டால்பி அட்மோஸ்
3 ஜிபி ரேம்
32 ஜிபி மெமரி
NFC கேஸ்ட், மல்டிகேஸ்ட் 2.0, க்ரோம்காஸ்ட் பில்ட்-இன், DLNA, மிராகேஸ்ட்
ஆக்சிஜன் பிளே 2.0 சார்ந்த கூகுள் டிவி
கூகுள் அசிஸ்டண்ட் பில்ட்-இன்
ஆக்சிஜன்பிளே, பிரைம்வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், யூடியூப், ஹாட்ஸ்டார், கூகுள் பிளே ஸ்டோர்
ப்ளூடூத் 5.0, 1x RF போர்ட், 1x RJ45 ஈத்தர்நெட் போர்ட்
3x HDMI 2.1 (HDMI 1 eARC), வைபை, 2x USB2.0
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 ஆகும். இதன் விற்பனை ஒன்பிளஸ் வலைதளம், அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற வலைதளங்கள் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் முன்னணி ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. முன்பதிவு மார்ச் 6 ஆம் தேதியும், விற்பனை மார்ச் 10 ஆம் தேதியும் துவங்க இருக்கிறது.