புதிய கேஜெட்டுகள்
null

ஏப்ரல் முதல் வாரத்தில் அறிமுகமாகும் புதிய ஒன்பிளஸ் நார்ட் ஸ்மார்ட்போன் - இத்தனை அம்சங்களா?

Published On 2023-03-23 16:00 GMT   |   Update On 2023-03-23 16:00 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது.
  • புதிய நார்ட் ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய நார்ட் பட்ஸ் மாடலையும் அறிமுகம் செய்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் நார்ட் CE 3 லைட் 5ஜி மற்றும் நார்ட் பட்ஸ் 2 மாடல்களின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இரு சாதனங்களும் இந்தியாவில் ஏப்ரல் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய நார்ட் CE 3 லைட் 5ஜி மாடல் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நார்ட் CE 2 லைட் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

புதிய நார்ட் CE 3 லைட் 5ஜி மாடலில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிவேக மற்றும் சீரான அனுபவத்தை வழங்கும் என ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதன் டிசைன் மற்ற மாடல்களில் இருப்பதை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. நார்ட் CE 3 லைட் 5ஜி மாடல் புதிதாக பேஸ்டல் லைம் நிறத்தில் கிடைக்கும் என உறுதியாகி இருக்கிறது.

 

ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் உடனடி எக்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

6.7 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

அட்ரினோ 619L GPU

6 ஜிபி, 8 ஜிபி ரேம்

128 ஜிபி, 256 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 13

டூயல் சிம் ஸ்லாட்

108MP பிரைமரி கேமரா

2MP டெப்த் கேமரா

2MP மேக்ரோ கேமரா

16MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5mm ஆடியோ ஜாக், சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

 

ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனில் இருப்பதை போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. இதன் உள்புறம் மட்டும் சற்றே வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த இயர்பட்ஸ் ஸ்பெக்லெட் பிளாக் நிறத்தில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

இரு சாதனங்களை அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒன்பிளஸ் நிகழ்வு 'Larger than life – A OnePlus Nord Launch Event' எனும் தலைப்பில் நடைபெற இருக்கிறது. அறிமுக நிகழ்வு ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு துவங்க இருக்கிறது. மற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே நார்ட் CE 3 லைட் 5ஜி மாடலும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Tags:    

Similar News