புதிய கேஜெட்டுகள்

விரைவில் வெளியீடு - இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் நார்டு 3 விலை விவரங்கள்!

Update: 2023-05-18 10:18 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் இணைத்தில் வெளியாகி உள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மாடல் உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான நார்டு 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக நார்டு 3 ஸ்மார்ட்போன் உருவாகி இருக்கிறது. புதிய நார்டு 3 மாடல் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு 3 வெளியீடு, விலை பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இந்த வரிசையில், டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் நார்டு 3 அம்சங்கள், இந்திய வெளியீடு மற்றும் விலை விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர நார்டு 3 ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஏஸ் 2V போன்றே காட்சியளிக்கிறது.

 

ஒன்பிளஸ் நார்டு 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

6.74 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட பன்ச் ஹோல் டிஸ்ப்ளே

மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர்

12 ஜிபி, 16 ஜிபி ரேம்

256 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ்

50MP பிரைமரி கேமரா

8MP இரண்டாவது லென்ஸ்

2MP மூன்றாவது கேமரா

16MP செல்ஃபி கேமரா

5000 எம்ஏஹெச் பேட்டரி

80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்டு 3 மாடலின் விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கும் என்று கூறப்படுகிறது. இதன் வெளியீடு ஜூன் மாத வாக்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News