புதிய கேஜெட்டுகள்

நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு தயார்... எப்போ ரிலீஸ் தெரியுமா?

Published On 2022-06-09 05:16 GMT   |   Update On 2022-06-09 05:16 GMT
  • நத்திங் நிறுவனம் வெளியிட உள்ள அதன் முதல் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கும் என கூறப்படுகிறது.
  • நத்திங் போன் இந்தியாவில் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நத்திங் போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அறிமுக நிகழ்வு வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி இரவு 8:30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாம் முன்கூட்டியே கூறியபடி இந்த போன் டிரான்ஸ்பரண்ட் டிசைனில் வர உள்ளது. தற்போது அதன் அம்சங்களும் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதனை பற்றி தற்போது பார்க்கலாம்.

நத்திங் நிறுவனம் வெளியிட உள்ள அதன் முதல் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங், ஸ்நாப்டிராகன் சிப்செட் மற்றும் நத்திங் இயங்குதளம் ஆகியவற்றை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த போன் இந்தியாவில் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 6.55 இன்ச் புல் HD + OLED டிஸ்பிளேயை கொண்டிருக்குமாம்.


குவால்காம் ஸ்நாப்டிராகன் 7 Gen1 சிப்செட்டுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் 128ஜிபி இண்டர்னல் மெமரி உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 4,500 அல்லது 5,000 mAh பேட்டரியும், வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர கேமரா பற்றிய தகவல் ரகசியமாகவே உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி, LTE, வைஃபை 6, புளூடூத் 5.2, GPS, டைப் C போர்ட் உள்ளிட்டவை அதில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News