புதிய கேஜெட்டுகள்

இணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா ரேசர் 2023

Published On 2023-02-22 12:18 IST   |   Update On 2023-02-22 12:18:00 IST
  • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ரேசர் 2023 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது.
  • தற்போதைய தகவல்களில் புதிய மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் பெரிய கவர் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மோட்டோரோலா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போன் விவரங்களை டெக்அவுட்லுக் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி புதிய மோட்டோரோலா ரேசர் 2023 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட பெரிய கவர் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் 2.7 இன்ச் ஸ்கிரீன் உள்ள நிலையில், புதிய மாடல் 3.6 இன்ச் அல்லது இதை விட பெரிய ஸ்கிரீன் வழங்கப்படலாம்.

புதிய மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போன் "ஜூனோ" குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக தற்போதைய தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2022 வெர்ஷனுடன் ஒப்பிடும் போது, புதிய மாடலில் வித்தியாசமான ரியர் டிசைன் உள்ளது. இந்த பேனல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் தனித்துவ டிசைன் கொண்டிருக்கிறது.

 

ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் மேட் வெல்வட் AG கிளாஸ், மோட்டோரோலா மற்றும் ரேசர் லோகோ இடம்பெற்று இருக்கிறது. மேல்புறத்தில் கிளாசி கிளாஸ், பெரும்பாலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

மோட்டோரோலா ரேசர் 2022 மாடலில் 2.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ 2 ஃப்ளிப் மாடலில் பெரிய கவர் டிஸ்ப்ளே அதாவது 3.26 இன்ச் அளவில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மோட்டோரோலா புதிய மாடலில் சற்றே பெரிய கவர் டிஸ்ப்ளே வழங்கஇருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய மாடலின் பின்புறத்தில் உயர்த்தப்பட்ட கேமரா ஐலேண்ட், இரண்டு கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ் இடம்பெற்று இருக்கிறது. எனினும், புதிய 2023 மோட்டோரோலா ரேசர் மாடலில் இது சற்றே வித்தியாசமாக உள்ளது. மோட்டோரோலா ரேசர் 2023 மாடலில் கேமரா ஐலேண்ட் வழங்கப்படவில்லை.

மோட்டோரோலா ரேசர் 2023 மாடலில் அதன் முந்தைய வெர்ஷனில் இருப்பதை போன்ற டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதன் நான்கு புறங்களிலும் மெல்லிய பெசல்கள், எளிதில் கண்டறிய முடியாத கிரீஸ்கள் உள்ளன. ஸ்மார்ட்போனின் ரெண்டர்களில் செல்ஃபி கேமரா இடம்பெறவில்லை, எனினும், இதில் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

Photo Courtesy: TechOutlook

Tags:    

Similar News