புதிய கேஜெட்டுகள்

மைக்ரோசாப்ட்-னா சும்மாவா - விண்டோஸ் 10-இல் விண்டோஸ் 11 அம்சங்கள்?

Update: 2022-08-08 08:17 GMT
  • மைக்ரோசாப்ட் நிறுவனம் கடைசியாக அறிமுகம் செய்த விண்டோஸ் 11 ஓ.எஸ். உலகின் பல்வேறு நாடுகளில் வெளியாக துவங்கி இருக்கிறது.
  • புது விண்டோஸ் 11 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகமானது.

விண்டோஸ் 11 அம்சங்களில் சிலவற்றை விண்டோஸ் 10 ஓஎஸ்-இல் வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விண்டோஸ் 11 ஓஎஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கும் ப்ரிண்டிங் சார்ந்த அம்சங்கள் தான் விண்டோஸ் 10-இல் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய ப்ரிண்டிங் அம்சம் ப்ரிண்ட் செய்யும் போது பின் வழங்க இருக்கிறது. இவ்வாறு செய்யும் போது போலி கனெக்‌ஷன்கள் மற்றும் பிழைகளை தவிர்க்க முடியும். இது விண்டோஸ் 1- வெர்ஷன் 22H2 அப்டேட்டின் கீழ் வழங்கப்பட இருக்கிறது. விண்டோஸ்-இல் புது மாற்றங்களை செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. விண்டோஸ் 11 ஓஎஸ்-இல் பிரைவசி ஆடிட்டிங் பெயரில் புது அம்சம் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.


இந்த அம்சம் மூலம் மைக்ரோபோன், கேமரா மற்றும் லொகேஷன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் செயலிகள் பற்றி அறிந்து கொள்ள முடியும். விண்டோஸ் 10 வெர்ஷன் 22H2 அப்டேட்டின் கீழ் விண்டோஸ் 11 அம்சங்கள் விண்டோஸ் 10-க்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

புது மாற்றம் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பழைய படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறு புது ஓஎஸ் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இது உண்மையாகும் பட்சத்தில் 2024 வாக்கில் விண்டோஸ் 12 ஓஎஸ் வெளியாக வேண்டும். எனினும், இது பற்றி மைக்ரோசாப்ட் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

Tags:    

Similar News