புதிய கேஜெட்டுகள்

இந்தியாவின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2022-11-08 06:28 GMT   |   Update On 2022-11-08 06:28 GMT
  • லாவா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
  • புது லாவா ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

லாவா நிறுவனம் கடந்த மாதம் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிவித்த லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டு இருக்கிறது. இதில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், கூடுதலாக 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 50MP பிரைமரி கேமரா, டெப்த் கேமரா, மேக்ரோ லென்ஸ், 8MP செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

லாவா பிளேஸ் 5ஜி அம்சங்கள்:

6.5 இன்ச் 1600x720 பிக்சல் 2.5D வளைந்த ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்

மாலி G57 MC2 GPU

4 ஜிபி ரேம், 3 ஜிபி விர்ச்சுவல் ரேம்

128 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 12

ஹைப்ரிட் டூயல் சிம்

50MP பிரைமரி கேமரா

டெப்த் கேமரா

மேக்ரோ கேமரா, எல்இடி பிளாஷ்

8MP செல்பி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிளாஸ் புளூ மற்றும் கிளாஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News