புதிய கேஜெட்டுகள்

6 ஜிபி ரேம் கொண்ட லாவா 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2023-02-10 14:32 GMT   |   Update On 2023-02-10 14:32 GMT
  • லாவா நிறுவனம் தனது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்தது.
  • புதிய லாவா 5ஜி ஸ்மார்ட்போன் 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.

லாவா நிறுவனம் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் - லாவா பிளேஸ் 5ஜி மாடலை ரூ. 9 ஆயிரத்து 999 எனும் அறிமுக விலையில் வெளியிட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் லாவா நிறுவனம் இன்று தனது லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.

அதிக ரேம் தவிர ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், லாவா பிளேஸ் 5ஜி மாடலில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, டெப்த் மற்றும் மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் லாவா பிளேஸ் 5ஜி மாடல் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

லாவா பிளேஸ் 5ஜி அம்சங்கள்:

6.5 இன்ச் 1600x720 பிக்சல் 2.5D வளைந்த ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்

மாலி G57 MC2 GPU

4 ஜிபி / 6 ஜிபி ரேம் + 3 ஜிபி விர்ச்சுவல் ரேம்

128 ஜிபி UFS மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 12

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

50MP பிரைமரி கேமரா

டெப்த் சென்சார், மேக்ரோ கேமரா

8MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய லாவா பிளேஸ் 5ஜி 6ஜிபி ரேம் கொண்ட மாடல் கிளாஸ் புளூ மற்றும் கிளாஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக விலை ரூ. 11 ஆயிரத்து 499 ஆகும். இந்த விலை பிப்ரவரி 15 ஆம் தேதி அமேசான் தளத்தில் நடைபெறும் முதல் விற்பனையின் போது மட்டுமே பொருந்தும். அதன் பின் இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

Tags:    

Similar News