புதிய கேஜெட்டுகள்

பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் லாவா ஸ்மார்ட்போன் - விரைவில் வெளியீடு!

Update: 2023-05-12 15:01 GMT
  • லாவா அக்னி 2 அறிமுக நிகழ்வு யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது.
  • லாவா அக்னி 2 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டு லாவா அடுத்த வாரம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய லாவா அக்னி 2 ஸ்மார்ட்போன் மே 16 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

சமீபத்தில் தான், இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இதில் ஸ்மார்ட்போனின் பின்புறம் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் தெளிவாக இடம்பெற்று இருந்தது.

இந்த நிலையில், லாவா நிறுவனம் தற்போதைய அறிவிப்பில், லாவா அக்னி 2 ஸ்மார்ட்போன் மே 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறது. லாவா அக்னி 2 அறிமுக நிகழ்வு யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து லாவா அக்னி 2 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி லாவா அக்னி 2 மாடலில் 6.5 இன்ச் HD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 50MP குவாட் கேமரா சென்சார், எல்இடி ஃபிளாஷ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிரிசஸர் வழங்கப்படுகிறது.

மெமரியை பொருத்தவரை 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், இன் டிஸ்பளே கைரேக சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 5ஜி, ப்ளூடூத் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News