புதிய கேஜெட்டுகள்

கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன ஜியோ போன் 5ஜி

Published On 2022-12-08 12:28 GMT   |   Update On 2022-12-08 12:28 GMT
  • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • முன்னதாக ஜியோபுக் லேப்டாப் மாடல் மிக குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜியோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஜியோ ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் LS1654QB5 எனும் மாடல் நம்பருடன் இடம்பெற்று இருக்கிறது. முன்னதாக பல்வேறு ஜியோபோன் மாடல்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. முன்னதாக ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலும் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருந்தது.

தற்போது கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கும் லிஸ்டிங்கில் ஜியோ போன் 5ஜி மாடலின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 549 புள்ளிகளையும், மல்டி கோரில் 1661 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஜியோ 5ஜி போன் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ பிராசஸர், அட்ரினோ 619 GPU வழங்கப்படுகிறது.

இதுதவிர firmware ஆக வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ போன் 5ஜி மாடலில் 6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், குறைந்தபட்சம் 32 ஜிபி மெமரி, 8MP செல்ஃபி கேமரா, 13MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், வைபை, ப்ளூடூத் 5.1, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பிரகதிஒஎஸ் கஸ்டம் ஸ்கின் வழங்கப்படும் என தெரிகிறது.

புது ஸ்மார்ட்போன் தவிர, சமீபத்தில் தான் ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 222 விலையில் புது பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருந்தது. இந்த சலுகை உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது. இதில் டேட்டா தவிர வேறு எந்த பலன்களும் சேர்க்கப்படவில்லை.

Tags:    

Similar News