புதிய கேஜெட்டுகள்

இவ்வளவு தானா? இணையத்தில் லீக் ஆன ஐகூ Z6 லைட் 5ஜி விலை விவரங்கள்

Published On 2022-09-09 11:54 IST   |   Update On 2022-09-09 11:54:00 IST
  • ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • புது ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

ஐகூ நிறுவனம் இந்தியாவில் புதிய Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஐகூ Z6 லைட் 5ஜி இந்திய விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதன் படி இந்திய சந்தையில் ஐகூ Z6 லைட் 5ஜி ஸ்மாட்ர்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஐகூ Z6 லைட் 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்படலாம். விலை விவரங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ இந்தியா வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.


தற்போது இணையத்தில் லீக் ஆகி இருக்கும் விலை விவரங்கள் உண்மையாகும் பட்சத்தில் ஐகூ Z6 லைட் 5ஜி மாடல் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும். மேலும் இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐகூ Z6 லைட் 5ஜி மாடலில் 6.58 இன்ச் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும்.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் / மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த ஃபன்டச் ஒஎஸ், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 2 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட கூலிங் சிஸ்டம் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கலாம். 

Tags:    

Similar News