புதிய கேஜெட்டுகள்

ஐகூ நிறுவனத்தின் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

Published On 2022-06-21 05:20 GMT   |   Update On 2022-06-21 05:20 GMT
  • ஐகூ நிறுவனம் தனது அடுத்த 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
  • ஐகூவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என கூறப்படுகிறது.

ஐகூ நிறுவனம் இந்தியாவில் அதன் 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்து இருந்தது. அதன்படி 9 சீரிஸில் இதுவரை ஐகூ 9, ஐகூ 9 ப்ரோ, ஐகூ 9 SE ஆகிய மாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்நிலையில், அந்நிறுவனம் தனது அடுத்த 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

அதன்படி ஐகூ 9T என பெயரிடப்பட்டுள்ள அந்த புது மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 SoC புராசசரை கொண்டிருக்கும் என தெரிகிறது. அதுமட்டுமின்றி 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய AMOLED டிஸ்ப்ளேவும் இதில் இடம்பெற்றுள்ளது.


ஐகூவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என கூறப்படுகிறது. இதன் அறிமுக தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த இதர அம்சங்கள் விரைவில் தெரியவரும். இதன் விலை பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Tags:    

Similar News