புதிய கேஜெட்டுகள்

150 சர்வீஸ் சென்டர்கள் - ஃபுல் ஃபோர்சில் இந்தியா வரும் ஹானர் 90

Published On 2023-08-25 16:19 GMT   |   Update On 2023-08-25 16:19 GMT
  • ஹானர் இந்தியாவின் யுத்திகளை மாதவ் சேத் ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார்.
  • ஹானர் 90 இந்திய வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ரி என்ட்ரி கொடுக்கப் போவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதன் பிறகு ஹானர் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் களமிறங்குவதை உறுதிப்படுத்தியது. இந்த நிலையில் ஹானர் பிரான்டின் முதல் ஸ்மார்ட்போன் ஹானர் 90 என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

மேலும், இந்திய சந்தையில் களமிறங்கும் போதே நாடு முழுக்க சுமார் 150 சர்வீஸ் சென்டர்களை வைத்திருக்க ஹானர் பிராண்டு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஹானர் இந்தியாவின் யுத்திகளை மாதவ் சேத் ஒவ்வொன்றாக அறிவித்து வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவரின் பிரபல ஆஸ்க் மாதவ் என்ற சமூக வலைதள உரையாடல் நிகழ்வில் இதனை அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்திய ஆஸ்க் மாதவ் நிகழ்வில், ரிபிராண்டு செய்யப்பட்ட ஹானர் 90 இந்திய வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஹானர் ஸ்மார்ட்போன்கள் கூகுள் சேவைகளை கொண்டிருக்கும் என்றும், ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News