புதிய கேஜெட்டுகள்

பிக்சல் ஃபோல்ட் வெளியீட்டை உறுதிப்படுத்திய கூகுள்

Update: 2023-05-05 11:11 GMT
  • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகமாகிறது.
  • பிக்சல் ஃபோல்ட் வெளியீட்டை உணர்த்தும் டீசரை கூகுள் பகிர்ந்து இருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்ட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதல் முறையாக பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் வெளியீட்டை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.

பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போனிற்காக கூகுள் நிறுவனம் பிரத்யேக வீடியோ வெளியிட்டுள்ளது. டுவிட்டர் மற்றும் யூடியூப் வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் வீடியோவில் பிக்சல் ஃபோல்ட் எப்படி காட்சியளிக்கும் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில், டேப்லட் போன்று காட்சியளிக்கிறது.

 

தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் சிறிய டச் ஸ்கிரீன் பேனல் உள்ளது. சமீபத்திய பிக்சல் போன்களில் உள்ளதை போன்றே பிக்சல் ஃபோல்ட் பின்புறமும் கேமரா பார் உள்ளது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி பிக்சல் ஃபோல்ட் மாடலில் 5.8 இன்ச் டிஸ்ப்ளே, 7.6 இன்ச் ஸ்கிரீன், கூகுள் டென்சார் G2 சிப்செட் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News