புதிய கேஜெட்டுகள்
null

சத்தமின்றி ஆப்பிள் உருவாக்கும் ஏர்பாட்ஸ் லைட் - வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2023-01-04 12:51 IST   |   Update On 2023-01-04 12:53:00 IST
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் லைட் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • இயர்பட்ஸ் தவிர ஆப்பிள் நிறுவனம் மைக்ரோ எல்இடி கொண்ட ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

விலை உயர்ந்த சாதனம் என்ற போதிலும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விட்டது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலின் புது வெர்ஷன் மைக்ரோ எல்இடி டிஸ்ப்ளே, சற்றே பெரிய ஸ்கிரீன் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. தொழில்நுட்ப வல்லுனரான ஜெஃப் பு புது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் எண்ட்ரி-லெவல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆப்பிள் ஏர்பாட்ஸ் லைட் பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளார்,

2023 ஆப்பிள் வாட்ச் மாடல்களின் அம்சங்கள் அதன் முந்தைய வெர்ஷனில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார். இதுதவிர 2024 ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலில் மைக்ரோ எல்இடி ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய தொழில்நுட்பத்தை பெறும் முதல் ஆப்பிள் சாதனமாக 2024 ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா இருக்கும். இந்த மாடலில் அதிகபட்சம் 2.1 இன்ச் வரையிலான ஸ்கிரீன் வழங்கப்படலாம்.

பிரைட்னஸ் மற்றும் கலர் அக்யுரசி உள்ளிட்டவைகளில் புதிய மைக்ரோ எல்இடி ஸ்கிரீன்கள் OLED-ஐ விட சிறப்பாக இருக்கும். எனினும், இந்த தொழில்நுட்பத்திற்கான செலவு மிகவும் அதிகம் ஆகும். 2024 ஆண்டில் புது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலில் துவங்கி பெரும்பாலான எதிர்கால சாதனங்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆப்பிள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புது ஏர்பாட்ஸ்-ஐ பொருத்தவரை ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்ஸ் சீரிசில் "லைட்" வெர்ஷனை ஆப்பிள் ஏர்பாட்ஸ் லைட் எனும் பெயரில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஏர்பாட்ஸ் லைட் மாடல் தற்போதைய ஏர்பாட்ஸ் சீரிசை விட குறைந்த விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஏர்பாட்ஸ் லைட் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது தற்போதைய ஏர்பாட்ஸ் 2 மாடலை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம்.

Tags:    

Similar News