புதிய கேஜெட்டுகள்

ஆப்பிள் நிறுவனத்தின் Foldable ஐபேட் - வெளியீடு எப்போ தெரியுமா?

Update: 2023-01-30 14:04 GMT
  • ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய சாதனங்கள் வெளியீடு பற்றி ஏராளமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
  • ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபேட் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது மடிக்கக்கூடிய ஐபேட் மாடல் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல வல்லுனரான மிங்-சி கியோ வெளியிட்டு இருக்கும் புது தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் அடுத்த 9 முதல் 12 மாதங்களுக்கு ஆப்பிள் புது ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்யாது என்றும் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஐபேட் மாடல் சிறு அப்டேட் செய்யப்பட்டு உற்பத்தி பணிகள் துவங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். புது மடிக்கக்கூடிய ஐபேட் மாடல் பற்றிய விவரங்களை மிங்-சி கியூ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், சரியான வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை.

சீனாவை சேர்ந்த ஆன்ஜி டெக்னாலஜி நிறுவனம் கிக்ஸ்டாண்ட் பாகங்களை உற்பத் தி செய்து கொடுக்கும் என தெரிகிறது. மடிக்கக்கூடிய ஐபேட் மாடல் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில், கடைசியாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் எல்ஜி டிஸ்ப்ளே உடன் இணைந்து மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளேக்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.

கடந்த ஆண்டு டிஸ்ப்ளே சப்ளை செயின் கன்சல்டண்ட் ஆய்வாளர் ரோஸ் யங் ஆப்பிள் நிறுவனம் 20 இன்ச் அளவில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து இருந்தார். கியோ தற்போது வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 2024 வாக்கில் ஆப்பிள் மடிக்கக்கூடிய சாதனம் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு முரணாக ரோஸ் யங் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய சாதனம் 2025-க்கு பின் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்த இதர தகவல்களில் புது மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே 20.25 இன்ச் அளவில் இருக்கும் என்றும் மடிக்கப்பட்ட நிலையில், இது 15.3 இன்ச் அளவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இதன் பேனலில் எல்ஜி டிஸ்ப்ளே மிக-மெல்லிய கவர் கிலாஸ் பயன்படுத்தும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News