புதிய கேஜெட்டுகள்

கொஞ்சம் குறைந்த விலையில் விஷன் ப்ரோ ஹெட்செட்.. ஆப்பிள் அசத்தல் திட்டம்

Published On 2023-10-17 09:45 IST   |   Update On 2023-10-17 09:45:00 IST
  • குறைந்த விலை ஹெட்செட்-இல் விஷன் ப்ரோ மாடலின் விசேஷ அம்சம் நீக்கப்படலாம்.
  • ஐசைட் அம்சம் அணிந்திருப்பவருக்கு எந்த வகையிலும் பலன் அளிப்பதில்லை.

ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-இன் குறைந்த விலை மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய ஹெட்செட் விலை 1500-இல் துவங்கி அதிகபட்சம் 2500 டாலர்களுக்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இத்தகைய குறைந்த விலையில், புதிய ஹெட்செட் உருவாக்கும் போது ஆப்பிள் நிறுவனம் ஹார்டுவேர் ரீதியில் சில அம்சங்களை வழங்காது என்று கூறப்படுகிறது. அதன்படி புதிய குறைந்த விலை ஹெட்செட்-இல் விஷன் ப்ரோ மாடலின் விசேஷமான ஐசைட் (EyeSight) எனும் அம்சம் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

இந்த அம்சம் பயனர்கள் ஹெட்செட் அணிந்திருக்கும் போது, மற்றவர்களால் பயனரின் கண்களை பார்க்க செய்யும். ஐசைட் அம்சம் அணிந்திருப்பவருக்கு எந்த வகையிலும் பலன் அளிப்பதில்லை என்பதால், இதனை நீக்குவது சாதனத்தின் விலையை குறைக்க நல்ல வாய்ப்பாக இருக்கும்.

முன்னதாக வெளியான தகவல்களில் விஷன் ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருந்த மேக் தர ஆப்பிள் சிலிகான் சிப்-க்கு மாற்றாக ஐபோன் சிப்செட் வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. மேலும் பிரைமரி ஸ்கிரீனின் ரெசல்யூஷன் குறைக்கப்படலாம் என்று கூறப்பட்டது. அமெரிக்க சந்தையில் ஆப்பிள் விஷன் ப்ரோ விலை 3 ஆயிரத்து 500 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News