புதிய கேஜெட்டுகள்

நத்திங் போன் 2 விலை இவ்வளவா? இணையத்தில் லீக் ஆன தகவல்!

Published On 2023-06-22 06:19 GMT   |   Update On 2023-06-22 06:19 GMT
  • நத்திங் போன் 1 மாடல் மூன்று வித வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • நத்திங் போன் 2 பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.

நத்திங் நிறுவனத்தின் புதிய நத்திங் போன் 2 மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ஒரே நாளில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நத்திங் போன் 2 பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதுதவிர நத்திங் நிறுவனரும் புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை அவ்வப்போது வழங்கி வருகிறார்.

இந்த வரிசையில், தான் நத்திங் போன் 2 மாடலின் ஐரோப்பாவுக்கான விலை மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய நத்திங் போன் 2 மாடல் இருவித ஸ்டோரேஜ் மற்றும் இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நத்திங் போன் 2 மாடலின் 256 ஜிபி ஸ்டோரேஜ் விலை 729 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 65 ஆயிரத்து 600 என்று நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இதன் 512 ஜிபி விலை 849 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 76 ஆயிரத்து 400 என்று நிர்ணயம் செய்யப்படலாம். இந்த விலை விவரங்கள் ஐரோப்பாவுக்கானது என்பதால், மற்ற பகுதிகளில் நத்திங் போன் 2 விலை வேறுப்படலாம். இதோடு, இந்த விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதால், இதில் மாற்றங்கள் செய்யப்படவும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

முன்னதாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 1 மாடல் மூன்று வித வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. நத்திங் போன் விலை இந்திய சந்தையில் ரூ. 32 ஆயிரத்து 999 என்று துவங்கியது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

 

Photo Courtesy: OnLeaks Smartprx

இதுவரை வெளியாகி இருக்கும் தவல்களின் படி நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் நத்திங் போன் 2 மாடல் மூன்று ஆண்டுகள் ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச் பெறும் என்றும் நத்திங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

Tags:    

Similar News