புதிய கேஜெட்டுகள்

மேஜிக் மாதிரி பணம் செலுத்தலாம்.. அசத்தும் ஏர்டெல் ஸ்மார்ட்வாட்ச்

Published On 2024-03-21 10:06 GMT   |   Update On 2024-03-21 10:06 GMT
  • சேவையை பிரபலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
  • லின்க் செய்து ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ், மாஸ்டர்கார்டு மற்றும் ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கான்டாக்ட்லெஸ் பேமண்ட் சேவையை பிரபலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச் வாங்குவோர், ஏர்டெல் தேங்ஸ் செயலியில் டிஜிட்டல் முறையில் கணக்கை துவங்க வேண்டும். பிறகு, அதே செயலியில் தங்களது கணக்கை லின்க் செய்து ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதனை செய்துமுடிக்க ஒரு நிமிடமே ஆகும்.

 


ஸ்மார்ட்வாட்ச் கனெக்ட் ஆனதும், பயனர்கள் டேப் அன்ட் பே (tap and pay) வசதி கொண்ட பாயின்ட் ஆஃப் சேல் (point of sale) மெஷின்களில் ஸ்மார்ட்வாட்ச்-ஐ வைத்து பேமண்ட் செய்துவிட முடியும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு ரூ. 1-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை செலுத்த முடியும்.

இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள என்.எஃப்.சி. (NFC) சிப் மாஸ்டர்கார்டு நெட்வொர்க்-இல் இயங்குகிறது. என்.எஃப்.சி. தொழில்நுட்பம் மூலம் பயனர்கள் கான்டாக்ட்லெஸ் பேமண்ட்களை ரிடெயில் ஸ்டோர், பி.ஒ.எஸ். (POS) டெர்மினல் மற்றும் இதர பேமண்ட் முறைகளில் மிக எளிதாக பணம் செலுத்த முடியும்.

அம்சங்களை பொருத்தவரை ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச்-இல் 1.85 இன்ச் அளவில் சதுரங்க வடிவம் கொண்ட எல்.சி.டி. டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள், 130 ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் வசதி மற்றும் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, ஸ்டிரெஸ் மானிட்டர் அம்சம், SpO2 மானிட்டரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்திய சந்தையில் புதிய ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கிரே, புளூ மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News