புதிய கேஜெட்டுகள்

மிக குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம் - ஏசர் அதிரடி

Published On 2022-09-16 06:25 GMT   |   Update On 2022-09-16 06:25 GMT
  • ஏசர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • புதிய ஆண்ட்ராய்டு டிவிக்களில் 60 வாட் ஹை-பை ப்ரோ ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் ஏசர் ஹோம் எண்டர்டெயின்மெண்ட் பொருட்களை விற்பனை செய்யும் உரிமம் பெற்ற இண்ட்கல் டெக்னாலஜிஸ் நிறுவனம் H மற்றும் S சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு டிவிக்களும் ஆண்ட்ராய்டு டிவி 11 ஒஎஸ் கொண்டிருக்கின்றன. இத்துடன் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன், MEMC தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன.

புதிய டிவி மாடல்களில் H சீரிஸ் 60 வாட் ஹை-பை ப்ரோ ஆடியோ சிஸ்டம், 65 இன்ச் மாடலில் 50 வாட் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவிக்களில் பிரீமியம் மெட்டல் பினிஷ், ஷெல் பாடி மற்றும் ஃபிரேம்லெஸ் டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இவை மூன்று ஆண்டுகள் வாரண்டியுடன் வருகின்றன.


இந்த டிவி-க்கள் நாட்டின் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள், நாடு முழுக்க சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிக விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவை 32 இன்ச் HD, 43 இன்ச் UHD, 50 இன்ச் UHD, 55 இன்ச் UHD மற்றும் 65 இன்ச் UHD டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளன. இத்துடன் ஸ்மார்ட் புளூ லைட் ரிடக்‌ஷன், HDR 10+, HLG சப்போர்ட், சூப்பர் பிரைட்னஸ், பிளாக் லெவல் ஆக்மெண்டேஷன் என ஏராள அம்சங்களை கொண்டிருக்கிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஏசர் அறிமுகம் செய்து இருக்கும் புதிய டிவி மாடல்கள் அறிமுக சலுகையாக சற்றே குறைந்த விலையில் விற்பனைக்கு வருகின்றன. அதன் பின் இவற்றின் விலை மாற்றப்பட்டு விடும். இவற்றின் விற்பனை முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் 4 ஆயிரத்திற்கும் அதிக சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கின்றன.

32 இன்ச் HD டிவி ரூ. 14 ஆயிரத்து 999

43 இன்ச் UHD டிவி ரூ. 29 ஆயிரத்து 999

50 இன்ச் UHD டிவி ரூ. 34 ஆயிரத்து 999

55 இன்ச் UHD டிவி ரூ. 39 ஆயிரத்து 999

65 இன்ச் UHD டிவி ரூ. 64 ஆயிரத்து 999

Tags:    

Similar News