புதிய கேஜெட்டுகள்

விரைவில் இந்தியா வரும் ஒன்பிளஸ் நார்டு வாட்ச்

Update: 2022-09-20 06:32 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நார்டு வாட்ச் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • இது தவிர ஒன்பிளஸ் 10R 5ஜி ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 10R 5ஜி பிரைம் புளூ எடிஷன் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில் ஒன்பிளஸ் நார்டு வாட்ச் மாடலையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் AMOLED டிஸ்ப்ளே, பல்வேறு சென்சார்கள், குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

புதிய ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய நார்டு வாட்ச் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. நார்டு சீரிஸ் என்பதால் இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய நார்டு வாட்ச் மாடலுக்காக பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.


இந்த ஸ்மார்ட்வாட்ச் அதிக வாட்ச் பேஸ்கள், டிஸ்ப்ளே, ஸ்போர்ட்ஸ் மோட்கள் பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்பட இருக்கிறது. இது போன்று ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் கொண்ட டீசர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமேசான் வலைதளத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி சிறப்பு விற்பனை துவங்க இருக்கிறது. அந்த வகையில் இந்த வாட்ச் சிறப்பு விற்பனையின் போது அறிமுகமாகாது என்றே தெரிகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஒன்பிளஸ் நார்டு வாட்ச் ஜிபிஎஸ், பல்வேறு வாட்ச் பேஸ்கள், ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை டிராக் செய்யும் சென்சார்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு வாட்ச் விலை ரூ. 5 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இது மட்டுமின்றி வங்கி சலுகைகள் மற்றும் சிறப்பு தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News