வழிபாடு

வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா 21-ந்தேதி தொடக்கம்

Published On 2025-10-18 14:24 IST   |   Update On 2025-10-18 14:24:00 IST
  • ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி திதி, முருகப்பெருமானுக்கு உரிய மகா கந்த சஷ்டியாக கருதப்படுகிறது.
  • தினசரி காலை, மாலையில் பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று சஷ்டி ஆகும். ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி திதி, முருகப்பெருமானுக்கு உரிய மகா கந்த சஷ்டியாக கருதப்படுகிறது.

அந்த வகையில், சென்னை வடபழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மகா கந்த சஷ்டி விழா வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து தினசரி காலை, மாலையில் பல்வேறு பூஜைகள் நடைபெறும். விழாவின் பிரதான நாளான 27-ந் தேதி இரவு 8 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந் தேதி இரவு 7 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று, சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

Tags:    

Similar News