புதுவைக்கு புத்தாண்டு கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் சாலையோர உணவகங்களில் குவிந்தனர்
- நடுத்தர உணவகங்களில் பிரெஞ்சு உணவு வகைகளும் விற்கப்படுகிறது.
- புத்தாண்டை கொண்டாட புதுவை வந்துள்ள சுற்றுலா பயணிகள் சாலையோர உணவகங்களில் குவிந்து உணவை ருசித்து சாப்பிட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் 20-க்கும் மேற்பட்ட நட்சத்திர. ஒட்டல்கள், 25-க்கும் மேற்பட்ட பீச் ரிசார்ட்டுகள் உள்ளன.
இவை மட்டுமன்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய விடுதிகள் உள்ளன. இவை அனைத்திலும் புத்தாண்டிற்கு விதவிதமான நிகழ்வுகளும் உணவுகளும் தயாராகி உள்ளன. நகரில் உள்ள 500-க்கும் மேற்பட்ட சாலை உணவகங்களும் சுற்றுலா பயணிகளை வரவேற்க உள்நாட்டு உணவுகள் மட்டுமல்லாது வெளிநாட்டு உணவு வகைகளையும் மக்களுக்கு வழங்க தயாராகி உள்ளன.
படேல் சாலை,மிஷன் வீதி, புஸ்சி வீதி, ஆம்பூர் சாலை, சுப்பையா சாலை ஆகியவற்றில் சிறிய ரக உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகளில் சுட சுட கிடைக்கும் உணவுகளை ரசிக்க பெரும் கூட்டமே இருக்கிறது.
வழக்கமான இட்லி,தோசை மீன் குழம்புடன் நூடுல்ஸ்,பிரைடு ரைஸ் என்பதையெல்லாம் தாண்டி மலேசியா புகழான நாசி கொரியன் இக்காம் ப்ளீஸ், நாசி பத்தாயா, இந்தோனேசியாவை சேர்ந்த மீ கொரியன், மேகி கொரியன், அமெரிக்கன் உணவான கிரிஸ்பி பிராண், கிரிஸ்பி விங்க்ஸ் உட்பட அனைத்து உணவு வகைகளும் இங்கு கிடைக்கிறது.
இவை மட்டுமல்ல நடுத்தர உணவகங்களில் பிரெஞ்சு உணவு வகைகளும் விற்கப்படுகிறது. இந்த உணவு வகைகளுடன் புதுவையில் புத்தாண்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
புத்தாண்டை கொண்டாட புதுவை வந்துள்ள சுற்றுலா பயணிகள் சாலையோர உணவகங்களில் குவிந்து உணவை ருசித்து சாப்பிட்டு வருகின்றனர்.