புதுச்சேரி
null

மாநில தலைவரை மாற்ற வேண்டும்- புதுவை காங்கிரஸ் நிர்வாகிகள் போர்க்கொடி

Published On 2022-12-07 11:40 IST   |   Update On 2022-12-07 13:24:00 IST
  • சட்டமன்ற தேர்தலுக்கு பின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனை மாற்ற வேண்டும் என எதிர்தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
  • புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தனர்.

புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரசில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு பின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனை மாற்ற வேண்டும் என எதிர்தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தனர்.

அப்போது புதுவை மாநிலத்தில் காங்கிரசை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும் உடனடியாக புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பின் போது பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, ரகுமான், சிவசண்முகம், ஓ.பி.சி. அணி தலைவர் கண்ணன், செயலாளர்கள் சரவணன், பி.எம்.சரவணன், சூசைராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News