புதுச்சேரி
null

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு தனியார் ஓட்டல் ஊழியர் தற்கொலை

Published On 2022-11-07 12:04 IST   |   Update On 2022-11-08 11:59:00 IST
  • ஆன்லைன் சூதாட்டத்திற்காக பல்வேறு இடங்களில் கடனாக பணத்தை வாங்கியிருந்தார்.
  • தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

திருக்கனூர் அருகே சோம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார்.

இவர் நகரப் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் சமையல் வல்லுனராக 5 வருடங்களாக பணியாற்றி வந்தார். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்காக பல்வேறு இடங்களில் கடனாக பணத்தை வாங்கியிருந்தார். ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் திண்டாடினார். அது மட்டுமில்லாமல் அதனை ஈடு செய்வதற்காக ஆன்லைன் ஆப் மூலமும் கடனை பெற்றுள்ளார்.

இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் புதுவை மீலாது வீதியில் அவர் தங்கியிருந்த விடுதியில் ஆடியோ பதிவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த ஆடியோவில், சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று வேலை பார்த்து கடனை அடைத்து விடலாம் என நினைத்தேன். அங்கும் சரியான வேலை கிடைக்காததால் மீண்டும் திரும்பி வந்து, ஏற்கனவே வேலை செய்த ஒட்டலில் வேலை செய்தேன். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ரூ.50 ஆயிரம் ஆன்லைன் விளையாட்டில் இழந்துள்ளேன் என குறிப்பிட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஒதியஞ்சாலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News