புதுச்சேரி

வில்லியனூர் நரிக்குறவர் குடியிருப்பில் மான்கறி, துப்பாக்கி பறிமுதல்

Published On 2022-12-31 12:53 IST   |   Update On 2022-12-31 12:53:00 IST
  • வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் நரிக்குறவர்கள் குடியிருப்புகள் உள்ளது.
  • வன விலங்குகளை வேட்டையாடியவர்கள் நீதிமன்றம் உத்தரவின் மூலம் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

சேதராப்பட்டு:

வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் நரிக்குறவர்கள் குடியிருப்புகள் உள்ளது.

இங்கு இன்று அதிகாலை வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி தலைமையில் வனத்துறையினரும் போலீஸ் சூப்பிரண்டு வம்சீரதரெட்டி தலைமையில் போலீசாரும் ஒதியம்பட்டில் உள்ள நரிக்குறவர்கள் வசிக்கும் 7 வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, நரிக்குறவர்கள் வேட்டையாடி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நீர் காகம் உள்ளிட்ட 63 வகை பறவை இனங்கள், விற்பனை போக மீதம் வைத்திருந்த 3 கிலோ மான்கறி, உடும்பு, முயல், ஆமை, கிளி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட 4 பெரிய ரக துப்பாக்கிகள், பாஸ்பரஸ் குண்டுகள், விலங்குகள் பிடிக்க பயன்படுத்தப்படும் கன்னிகள், அரிவாள் கத்தி, வாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் ஆகியவற்றைகளை பறிமுதல் செய்தனர்.

சோதனையின் போது நரிக்குறவர்களுக்கும் வனத்துறை நிற்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த வனத்துறை ஊழியர் ஆறுமுகத்தின் கை முறிவு ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பறிமுதல் செய்யப்பட்ட பறவைகள் ஆயுதங்கள் புதுவை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி கூறுகையில், ஒதியம்பட்டு நரிக்குறவர் பகுதியில் அரிய வகை பறவைகள் வேட்டையாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு போலீசாருடன் சேர்ந்து சோதனை மேற்கொண்டோம்

அப்போது 7 வீடுகளில் நடத்திய சோதனையில் அரியவகை பறவைகள், விலங்குகள், துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். குறிப்பாக மான்கறி அங்கு இருந்தது.

மான் கறியை விற்றவருக்கும் அதை வாங்கியவருக்கும் 7 ஆண்டு வரை தண்டனை உண்டு. மேலும் கியூ.ஆர் கோடுகளைக் கொண்டு செல்போனில் வாடிக்கையாளர்களை உருவாக்கி ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்து கொண்டு விலங்குகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இந்த வன விலங்குகளை வேட்டையாடியவர்கள் நீதிமன்றம் உத்தரவின் மூலம் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

Tags:    

Similar News