புதுச்சேரி



அரசு எச்சரிக்கையையும் மீறி அமைச்சக ஊழியர்கள் விடுப்பு எடுத்து தர்ணா

Published On 2022-11-23 14:26 IST   |   Update On 2022-11-23 14:26:00 IST
  • அரசின் சார்பில் அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
  • கோரிக்கைகளை விளக்கி செந்தில்குமார், சிவக்குமார், மணிகண்டன், சக்கரவர்த்தி, ராமமூர்த்தி, இளமுருகன், அன்பரசன் பேசினர்.

புதுச்சேரி:

புதுவை அமைச்சக பணியாளர்களுக்கான கூட்டு நடவடிக்கைக்குழுவினர் உதவியாளர்களை நேரடி நியமனம் மூலம் பணியில் சேர்க்காமல் பதவி உயர்வு மூலம் நியமிக்கக்கோரி ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்த அறிவித்திருந்தனர்.

இதையடுத்து அரசின் சார்பில் அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் எச்சரிக்கையையும் மீறி அமைச்சக ஊழியர்கள் விடுப்பு எடுத்து மிஷன் வீதியில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு சங்க நிர்வாகி முருகவேல் வரவேற்றார். சேஷாச்சலம் தலைமை வகித்தார். செல்வம், அருள்தாஸ் வாழ்த்தி பேசினர். ஆனந்தராசன், கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினர். பரசுராமன், பிரபாகண்ணன் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகளை விளக்கி செந்தில்குமார், சிவக்குமார், மணிகண்டன், சக்கரவர்த்தி, ராமமூர்த்தி, இளமுருகன், அன்பரசன் பேசினர். விஜயகுமார் நன்றி கூறினார்.

Similar News