புதுச்சேரி

பூரணாங்குப்பம் ஓவியர் விநாயகத்துக்கு ஓவிய ரத்னா விருதை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கிய காட்சி.

பூரணாங்குப்பம் விநாயகத்துக்கு ஓவிய ரத்னா விருது

Published On 2023-10-04 06:10 GMT   |   Update On 2023-10-04 06:10 GMT
  • புதுவை தவளகுப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம்.
  • பல்வேறு வகைகளில் தங்களது திறமையை வெளிக்காட்டினார்.

புதுச்சேரி:

புதுவை தவளகுப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சுமார் 23 வருடங்களாக ஓவியராக பணிபுரிந்து வருகிறார்.

டிஜிட்டல் வருவதற்கு முன்பு, துணியில் எழுதுவது, சுவரில் வண்ணம் தீட்டுதல், அரசு கட்டிடங்களுக்கு பெயர் எழுதுதல், விழிப்பு ணர்வு ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட பல்வேறு வகை களில் தங்களது திறமையை வெளிக்காட்டினார்.

இந்த நிலையில் தற்போது டிஜிட்டல் ஆன பிறகு சுவரில் எழுதுதல், பெயர் எழுதுதல் உள்ளிட்ட குறிப்பிட்ட வேலைகள் மட்டுமே வருவதால் 5 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பகுதி நேர ஓவிய பயிற்சி பள்ளி சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவரது ஓவிய கலைத்திறமையை பாராட்டி முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தில் நடந்த ஓவிய அகடாமி நிகழ்ச்சியில் ஓவிய ரத்னா விருதினை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கி சிறப்பித்தார்.

Tags:    

Similar News