புதுச்சேரி

கோப்பு படம்.

பேராசிரியர் ஓய்வு வயதை 65 ஆக அறிவிக்க வேண்டும்

Published On 2023-07-13 04:45 GMT   |   Update On 2023-07-13 04:45 GMT
  • தொழில்நுட்ப ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
  • புதுவை அரசின் உயர்கல்வி துறை அதனை ஏற்க மறுப்பது ஆசிரியை சமூகத்தின் மன வலியை மேலும் அதிகரிக்கிறது.

புதுச்சேரி:

புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரி சங்க தலைவர் பேராசிரியர் செல்வராஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழக மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் 65 வயது அடைந்த உடன் பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பணி புரியும் பேராசிரியர்கள் 62 வயதில் மிகவும் மன வேதனையுடன் ஓய்வு பெறும் சூழ்நிலை உள்ளது.

62 வயதிற்கு பின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் தங்கள் உரிமைகளை நீதிமன்றத்தில் மூலம் வாதாடி பெற்று வந்தாலும் புதுவை அரசின் உயர்கல்வி துறை அதனை ஏற்க மறுப்பது ஆசிரியை சமூகத்தின் மன வலியை மேலும் அதிகரிக்கிறது.

இதுகுறித்து ஆசிரியர் சங்கம் முதல்-அமைச்சர் ரங்கசாமி அவர்களை சந்தித்து முறையிட்ட போது எங்கள் கோரிக்கை நியாயமானது என்று கூறுகிறார் என்றாலும் ஆனால் எந்த சக்தி இதற்கான அரசாணையை வெளியிடாமல் தடுக்கிறது என்று தெரியவில்லை.

மாநில அரசின் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு இந்த ஓய்வு வயது 2016 முதல் அமல்படுத்தப் பட்டிருக்கும் போது மாநிலத்தின் மணி மகுடமாக விளங்கும் புதுவை தொழில் நுட்பக் கழக பேராசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News