புதுச்சேரி

கவுண்டன்பாளைம் முத்திரத்தினம் அரங்கம் பள்ளியில் நடந்த என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழாவில், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜன் பங்கேற்று மாணவர்களை வாழ்த்திய காட்சி.

என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா

Update: 2022-10-06 09:16 GMT
  • புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 7 நாள் என்.எஸ்.எஸ் முகாமின் நிறைவு விழா நடந்தது.
  • நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் நாட்டு நலப்பணி திட்டம் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறினர்.

புதுச்சேரி:

புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 7 நாள் என்.எஸ்.எஸ் முகாமின் நிறைவு விழா நடந்தது.

விழாவிற்கு டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் ரத்தினவேல் காமராஜ், ரங்கநாயகி வளவன், பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், ஆலோசகர் ரத்தினபிரியா அருண்குமார், அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார். நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் நாட்டு நலப்பணி திட்டம் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறினர்.

மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், ேபாட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெயந்தி தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News