புதுவை பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்ற மையம் திறப்பு விழா நடந்த போது எடுத்த படம்.
- புதுவை பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது.
- தலைவர் மதிமரன் நடராஜன், மையத்தின் நோக்கம் குறித்து விளக்கினார்.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் புதுவை பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை தலைவர் சுப்பிரமணியம் ராஜூ வரவேற்றார். கல்வி புதுமைகள், கிராமப்புற மறுசீரமைப்பு இயக்குனர் தரணிக்கரசு தொடக்க உரையாற்றினார். மையத்தின் தலைவர் மதிமரன் நடராஜன், மையத்தின் நோக்கம் குறித்து விளக்கினார்.
துணைவேந்தர் குர்மீத்சிங் தலைமை வகித்து மையத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். பதிவாளர் ராஜ்நீஷ்பூதானி, சுற்றுச்சூழல் துறை தலைவர் ராமமூர்த்தி சிறப்புரை யாற்றினர். பெங்களூருவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரக தலைமை நிர்வாக அதிகாரி ஜோனாஸ்பு ருன்ஸ்வி தனது கருத்துக்களை பகிர்ந்தார்.
அரசியல், சர்வதேச ஆய்வுகள் துறை இணை பேராசிரியர் நந்தகிஷோர் நன்றி கூறினார்.