புதுச்சேரி

கோப்பு படம்.

டெங்கு காய்ச்சல் பரவுகிறது

Published On 2023-06-29 14:13 IST   |   Update On 2023-06-29 14:13:00 IST
  • பொது மக்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.
  • டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

புதுச்சேரி:

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காட்டுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெரு, கன்னிய கோவில் மணப்பட்டு சாலையில் கடந்த சில தினங்களாக பொது மக்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.

கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வந்தவர்களை சோதனை செய்தபோது அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பலருக்கு இருப்பது தெரிய வந்தது.

கடந்த சில தினங்களில் சுமார் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அங்கு பல இடங்களில் உள்ள சிறிய கிணறு சேதமடைந்த பொருட்களில் நல்ல தண்ணீர் தேங்கி டெங்கு கொசுக்களுக்கான முட்டைகள் அதிகமாக உற்பத்தியாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்தவுடன் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து, ஆஷா பணியாளர்கள் மற்றும் மலேரியா நோய் தடுப்பு பிரிவு ஊழியர்கள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் போதிய பாதுகாப்பும் நடவடிக்கையும் இருக்க அறிவுறுத்தினர். இருந்த போதும் டெங்கு காய்ச்சல் அப்பகுதியில் தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். 

Tags:    

Similar News