புதுச்சேரி

விழா மேடையில் கண் கலங்கிய முதலமைச்சர் ரங்கசாமி.

null

மாணவியின் பேச்சை கேட்டு கண்ணீர் சிந்திய முதலமைச்சர் ரங்கசாமி

Published On 2023-07-24 10:02 IST   |   Update On 2023-07-24 10:52:00 IST
  • 3 பேருமே அரசு மருத்துவ கல்லூரியில் படித்து மருத்துவராகி உள்ளோம்.
  • மாநில அரசுக்கு என ஒரு கல்லூரியை உருவாக்க அப்போது காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக இருந்த ரங்கசாமி தீவிர முயற்சி செய்தார்.

புதுச்சேரி:

புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 2010 முதல் 2017 வரை படிப்பை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

கல்லூரி இயக்குனர் உதயசங்கர் வரவேற்றார். இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ பட்டம் பெற்ற 626 பேருக்கு முதலமைச்சர் ரங்கசாமி பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

விழாவில் பேசிய கல்லூரி இயக்குனர் உதயசங்கர், முதலமைச்சர் ரங்கசாமியால்தான் இந்த மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டது. அவரது கையால்தான் பட்டமளிப்பு விழா நடக்க வேண்டும் என இறைவனின் ஆசி இருந்துள்ளது என்றார்.

அடுத்து முதுநிலை மருத்துவ மாணவி மணிமொழி பேசும்போது, நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவள். எங்கள் குடும்பத்தில் உள்ள 4 பேரில் 3 பேர் பெண்கள். 3 பேருமே அரசு மருத்துவ கல்லூரியில் படித்து மருத்துவராகி உள்ளோம். இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி தான் காரணம் என்றார். இவர்களின் பேச்சை கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி, உணர்ச்சி வசப்பட்டு வழிந்த ஆனந்த கண்ணீரை துடைத்து கொண்டார். இதைப்பார்த்து மேடையில் இருந்தவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

புதுவையில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளே இருந்தது. மாநில அரசுக்கு என ஒரு கல்லூரியை உருவாக்க அப்போது காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக இருந்த ரங்கசாமி தீவிர முயற்சி செய்தார். இதற்கு பல தடைகளும், முட்டுக்கட்டைகளும் எழுந்தது.

ஒரு கட்டத்தில் மருத்துவ கல்லூரியை மாநில அரசு கைவிடும் நிலைக்கு சென்றது. இதனையெல்லாம் தாண்டியே இந்த கல்லூரி திறக்கப்பட்டது. இதன் நினைவாகவே முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

Tags:    

Similar News