செய்திகள்
அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.
காஞ்சீபுரம் :
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகி றார். கடந்த மாதம் 31 நாட்களும் சயன கோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள் பாலித்து வருகிறார். வருகிற 16-ந் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடிவுக்கு வருவதால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
44-வது நாளான நேற்று அத்திவரதர் பச்சை நிற பட்டாடையில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கிரீடம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் காஞ்சீபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் வெள்ளத்தில் காஞ்சீபுரம் நகரமே திக்குமுக்காடியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் 2½ கிலோ மீட்டார் தூரம் வரை காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். பக்தர்கள் 7 வரிசைகளில் அனுமதிக்கப்பட்டனர். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தனிவரிசையில் சக்கரநாற்காலி மூலம் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை 4½ மணியளவில் காஞ்சீபுரத்தில் லேசான மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க குவிந்தனர். இரவு 7 மணி வரை 3 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். மேலும் 2 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க காத்திருந்தனர்.
பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் தேவையான ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.
அத்திவரதரை நேற்று தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்பட முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்தனர். தமிழக அரசு கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
அத்திவரதர் சிலை வருகிற 17-ந் தேதி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது.