செய்திகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா

Published On 2016-04-20 13:45 IST   |   Update On 2016-04-20 13:45:00 IST
மேல்மருவத்தூர், ஆதிபரா சக்தி சித்தர் பீடத்தில் சித்திரைப் பவுர்ணமி விழா இன்று அதிகாலை மங்கள இசை, சிறப்பு அபிஷேகத் துடன் தொடங்கியது.

மேல்மருவத்தூர், ஆதிபரா சக்தி சித்தர் பீடத்தில் சித்திரைப் பவுர்ணமி விழா இன்று அதிகாலை மங்கள இசை, சிறப்பு அபிஷேகத் துடன் தொடங்கியது.

ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னி லை வகித்தார். தஞ்சை மாவட்ட தலைவர் வாசன் தலைமை தாங்கினார்.

காலை 9.15 மணிக்கு சித்தர் பீடத்துக்கு வந்த பங்காரு அடிகளாருக்கு வரவேற்பும், பாதபூஜையும் நடைபெற்றது. இதில் திரளான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

இதைத் தொடர்ந்து நடந்த அன்னதானத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் கோ.ப.செந்தில் குமார் தொடங்கி வைத்தார். மாலை 6 மணிக்கு நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை (21–ந்தேதி) அதிகாலை மங்கள இசை, அபிஷேகம் மற்றும் பங்காரு அடிகளாருக்கு வரவேற்பு பாத பூஜை நடைபெறுகிறது.

காலை 10 மணியளவில் சிறப்பு கலசவிளக்கு வேள்வி பூஜை நடக்கிறது. இதனை, பங்காரு அடிகளார் தொடங்கி வைக்கிறார்.

லட்சுமி பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், சக்தி பீடங்கள் இணைச் செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொள்கிறார்கள்.

சித்ரா பவுர்ணமியை யொட்டி மேல்மருவத்தூர் முழுவதும் செவ்வாடை பக்தர்களால் நிரம்பி வழிகிறது. அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தங்கும் இடம் வசதிகள் சிறப் பாக செய்யப்பட்டு உள்ளன.

டி.எஸ்.பி. சிவசங்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Similar News