செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பெற்ற 50வது வெற்றி

Published On 2019-06-23 12:28 IST   |   Update On 2019-06-23 12:28:00 IST
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றி, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெற்ற 50-வது வெற்றியாக அமைந்தது.
லண்டன்:

சவுத்தாம்டனில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்தியா
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் 49.5 ஓவரில் 213 ரன்னுக்கு சுருண்டது. இறுதி ஓவரில் மொகமது ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை அரங்கில் இந்திய அணிக்கு கிடைத்த 50-வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் வரிசையில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. 67 வெற்றிகள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 52 வெற்றிகளுடன் நியூசிலாந்து 2வது இடத்திலும் உள்ளது. 

Similar News